விஷ பூச்சி கடித்து மூதாட்டி பலி | ஈரோடு செய்திகள் | Dinamalar
விஷ பூச்சி கடித்து மூதாட்டி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
10:10

ஈரோடு: ஈரோடு: ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பவானி மெயின் ரோடு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பெரியசாமி மனைவி தன லட்சுமி, 65; பழைய பேப்பர், பாட்டில் எடுக்கும் வேலை செய்கிறார். நேற்று முன் தினம் மாலை தான் குடியிருக்கும் பகுதியில் மாநகராட்சி சமுதாய கூடம் முன்புறம் பாட்டில்களை எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை விஷ பூச்சி கடித்தது. இதில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X