ஓடும் லாரியில் தீ விபத்து | சேலம் செய்திகள் | Dinamalar
ஓடும் லாரியில் தீ விபத்து
Added : அக் 21, 2021 | |
Advertisement
 

வாழப்பாடி: திருவாரூரை சேர்ந்தவர் விக்னேஷ், 30. இவர், சேலம் மாவட்டம், ஓமலூர், மோட்டூரில், செங்கற்கள் ஏற்றிக்கொண்டு, அரியலூர் நோக்கி, நேற்று காலை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தார். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, லாரியின் அடிப் பாகத்தில் தீப்பற்றியது. விக்னேஷ் லாரியை நிறுத்திவிட்டு இறங்கிக்கொண்டார். வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் வையாபுரி தலைமையில் வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சூடாக இருந்த செங்கற்கள் உரசி தீப்பிடித்திருக்கலாம் என, வீரர்கள் கூறினர்.

ஆம்னி வேன் தீக்கிரை: வீரபாண்டி, ராஜ வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 50. இருசக்கர வாகன மெக்கானிக்கான இவர், சேலம், நான்கு ரோட்டில் கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான மாருதி ஆம்னி வேனை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். ஒரு மாதமாக பயன் படுத்தவில்லை. நேற்று காலை, 3:00 மணிக்கு வேன் தானாக தீப்பிடித்து எரிந்தது. சுரேஷ் தகவல்படி, சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்தனர். ஆனால், வேன் முழுதும் எரிந்து சாம்பலானது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X