மாயமான பெண் சடலமாக மீட்பு | சேலம் செய்திகள் | Dinamalar
மாயமான பெண் சடலமாக மீட்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:25

வாழப்பாடி: சேலம், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி கண்மணி, 38. இவரது மகள் தித்மிலா, 19. பிளஸ் 2 முடித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த ஆக., 6ல், கண்மணியும், அவரது மனைவியும், கூலி வேலைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது, தித்மிலாவை காணவில்லை. அவர்கள் புகார்படி, காரிப்பட்டி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை, மின்னாம்பள்ளியில் உள்ள கிணற்றில், பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார், வாழப்பாடி தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரித்ததில் தித்மிலா என தெரிந்தது. தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா, வேறு காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சமலை: அதேபோல், சேலம், கஞ்சமலை உச்சியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, அழுகிய நிலையில், எலும்புக்கூடாக கிடந்த உடல் அருகே விஷ பாட்டில் கிடந்தது. இரும்பாலை போலீசார், இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X