சேலம்: ஆத்தூர், புங்கவாடி, கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்த, அழகுவேல் மனைவி சுகந்தி, 36. இவர், கடந்த, 14 மாலை, 4:00 மணிக்கு, சேலத்தில் உள்ள உறவினரை பார்க்க மொபட்டில் வந்துகொண்டிருந்தார். அவரது மகன் ஜீவானந்தம், 15, ஓட்டினார். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மாசிநாயக்கன்பட்டி அருகே வந்தபோது, வேகத்தடை மீது மொபட் வேகமாக ஏறியது. அப்போது தடுமாறி விழுந்த சுகந்திக்கு, தலையில் படுகாயம் ஏற்பட்டது. மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.