தரமில்லாத தார்ச்சாலை: பொதுமக்கள் புகார் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
தரமில்லாத தார்ச்சாலை: பொதுமக்கள் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:39

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த சவுட்டஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மன்னன்நகர் பகுதியிலிருந்து பள்ளிப்பட்டி பகுதி வரை சுமார், 2 கி.மீ., தூரத்துக்கு, 46 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, 1ல் துவங்கி நடக்கிறது. இச்சாலை தரமில்லாமலும் அவசரகதியிலும் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: சுற்றுவட்டாரத்தில் சவுட்டஹள்ளி, மலையாண்டஹள்ளி உள்ளிட்ட பஞ்.,ல் தரமற்ற முறையில் தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. பெயரளவுக்கு ஜல்லி கொட்டி தார்ச்சாலை போட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையில் ரோட்டின் பெரும் பகுதி கரைந்து விட்டது. இதேபோல் மலையாண்டஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட தொடக்கப்பள்ளியிலிருந்து தர்க்கண் நகர் வரை போடப்பட்ட தார்ச்சாலை முற்றிலும் சேதமடைந்து விட்டது. தார்ச்சாலை போட, 40.25 லட்சம் ரூபாய் என கணக்கு காண்பித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளுக்கு நேரடியாக வந்து, சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்யவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X