கோவை : கோவை மதுக்கரையை அடுத்த கோழிமடை அருகேயுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது மனைவி லட்சுமி, 56. மகன் காளிசாமி, மருமகள் பிரியா, பேரன் ஹரீஷ். நேற்று காலை முருகேஷை தவிர அனைவரும் பதிமலையிலுள்ள முருகன் கோவிலுக்கு சென்றனர்.சாமி கும்பிட்ட பின் வீடு திரும்ப முற்பட்டபோது மழை பெய்தது. அங்குள்ள ஒரு மரத்தினடியில் அனைவரும் ஒதுங்கினர். எதிர்பாராவிதமாக மரத்தை தாக்கிய மின்னலில் லட்சுமியும் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.