சங்ககிரியில் லாட்டரி சீட்டு விற்பனை கனஜோர்: பாதிக்கப்படும் கூலித்தொழிலாளர்கள் குடும்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:49

சங்ககிரி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதிகளில் கனஜோராக விற்பனையாகிறது. ஏழை, எளிய குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.


ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை கெடுத்துக் கொண்டிருந்த லாட்டரி சீட்டு விற்பனையை, 2003ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை செய்தார். லாட்டரி சீட்டுகளை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டு, அதை செயல்படுத்தினார். அதன் பின் ஆட்சிக்கு வந்தவர்களும் தடையை நீக்கவில்லை.


ஒரு நம்பர் லாட்டரி...: ஆனால், சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதிகளில், தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளும், வெற்று காகிதத்தில் நெம்பர் எழுதியுள்ள ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளும் அமோகமாக விற்பனையாகி வருகிறது. சங்ககிரி பகுதிகளில் சில போலீஸ் அதிகாரிகளின் ஆசியுடன் லாட்டரி சீட்டு விற்பனை நடக்கிறது.


தொழிலாளர்கள் பாதிப்பு: மேலும், தேவூர், மகுடஞ்சாவடி, இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்ற கேரள லாட்டரி சீட்டுகளால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அன்றாடம் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்து வருபவர்களில், பலர் வரும் வழியிலேயே லாட்டரி வாங்கி பணத்தை தொலைக்கின்றனர். அவர்களது குடும்பத்தினர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவதிப்படுகின்றனர்.


வியாபாரிகள் கைது: இது குறித்து சங்ககிரி டி.எஸ்.பி., நல்லசிவம் கூறியதாவது: லாட்டரி விற்பனை பற்றி தகவல் தெரிந்ததால் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், லாட்டரி சீட்டு விற்ற முக்கியமான வியாபாரி கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், லாட்டரி சீட்டுகளை விற்ற இடைப்பாடி, மகுடஞ்சாவடியில், தலா இருவர் என மொத்தம், 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றி தொடர்ந்து விசாரணை செய்து, லாட்டரி சீட்டு விற்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X