ஒன்றிய குழு துணைத்தலைவர் யார்? தி.மு.க., - அ.தி.மு.க., ஆலோசனை | சேலம் செய்திகள் | Dinamalar
ஒன்றிய குழு துணைத்தலைவர் யார்? தி.மு.க., - அ.தி.மு.க., ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
12:49

பனமரத்துப்பட்டி: தி.மு.க., - அ.தி.மு.க.,வில் தலா இருவர், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு துணைத்தலைவருக்கு முயற்சிப்பதால், வேட்பாளரை, அக்கட்சி தலைமை முடிவு செய்ய உள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, 6 கவுன்சிலர், தி.மு.க., - 5, பா.ம.க., - 1, கம்யூ - 1, என, 13 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த, 9வது வார்டு கவுன்சிலர், ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்த குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அந்த வார்டுக்கு நடந்த தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. ஒன்றிய குழு துணைத்தலைவர் பதவிக்கு, நாளை மதியம், 2:30 மணிக்கு தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., தரப்பில் ஒரு பெண் கவுன்சிலர், ஒரு ஆண் கவுன்சிலர் இடையே, அப்பதவியை கைப்பற்ற போட்டி எழுந்துள்ளது. அ.தி.மு.க., தரப்பில், அக்கட்சி பெண் கவுன்சிலர், பா.ம.க., கவுன்சிலர் முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., கட்சி தலைமை, ஒன்றிய குழு துணைத்தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X