தான்தோன்றிமலை பஞ்., யூனியன் தலைவர் தி.மு.க.,வுக்கு தாவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2021
16:23

கரூர்: அ.தி.மு.க.,வை சேர்ந்த கடவூர், அரவக்குறிச்சி பஞ்., யூனியன் தலைவர்களை அடுத்து, தான்தோன்றிமலை பஞ்.,யூனியன் தலைவரும், தி.மு.க.,வுக்கு தாவினார்.


கடந்த, 2019ல், நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்ட பஞ்., தலைவர் பதவி மற்றும் கரூர், தான்தோன்றிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், தோகமலை, கடவூர், குளித்தலை ஆகிய எட்டு பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும், அ.தி.மு.க., கைப்பற்றியது. கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு, கடவூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் செல்வராஜ், அரவக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் தலைவர் வள்ளியாத்தாள் ஆகியோர் அடுத்தடுத்து, தி.மு.க.,வில் சேர்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் தலைவர் சிவகாமி, அவரது கணவரும் தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளருமான வேலுசாமி ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.


* கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் பஞ்சாயத்து யூனியன் தலைவராக தேர்வு பெற்ற எட்டு பேரில் மூன்று பேர், தி.மு.க.,வில் சேர்ந்து விட்டனர். பஞ்., யூனியன் தலைவர்களுக்கு அரசு சார்பில் ஜீப், அலுவலக வசதிகள் உள்ளன. கடந்த மே மாதம், தி.மு.க., ஆட்சி மாறிய நிலையில், அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாத நிலையில், பதவியை காப்பாற்றி கொள்ளவும், அரசு வழங்கும் வசதிகளை அனுபவிக்கவும், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றவர்கள், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X