அரசு அனுமதியின்றி கட்டிய மாடி வீடு 2வது நாள் இடிப்பு | கரூர் செய்திகள் | Dinamalar
அரசு அனுமதியின்றி கட்டிய மாடி வீடு 2வது நாள் இடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2021
16:24

குளித்தலை: தண்ணீர்பள்ளியில், அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தளங்களை கோர்ட் உத்தரவின்படி, அதிகாரிகள் இரண்டாவது நாள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்.. தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் அனந்தபத்மநாபன். இவர் இரண்டு மாடி கட்டடங்களுக்கு மட்டும் அனுமதி பெற்று, 3, 4 தளங்களை உரிய அனுமதி பெறாமல் கட்டினார். அரசு அனுமதி பெறாமல், கட்டப்பட்ட இரண்டு தளங்களை அகற்ற, 2019 செப்.,ல் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, 3, 4வது தளத்தில் உள்ள கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள், பஞ்., தலைவர் ரத்தினவள்ளி மேற்பார்வையில் வருவாய்துறை, மின்துறை பணியாளர்கள், போலீசார் பாதுகாப்புடன், கட்டுமான பணியாளர்கள் உரிய பாதுகாப்புடன் மாடி இடிக்கும் பணி நடந்து வருகிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X