ஆறு பேர் கொண்ட இரிடியம் மோசடி கும்பல் கைது * பிற குழுக்களுடன் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 அக்
2021
19:29
பதிவு செய்த நாள்
அக் 21,2021 19:17

கோவை:இரிடியம் கலந்த கலசம் விற்பனை செய்வதாக ரூ.27 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


கேரளா மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் மகரூப், 58 மற்றும் அப்துல் கலாம், 44. இவர்களை தொடர்பு கொண்ட கேரளாவை சேர்ந்த ஷாஜி, தனக்கு தெரிந்தவரிடம் இரிடியம் கலசம் இருப்பதாக கூறி அதில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். இதையடுத்து இருவரும், கடந்த மூன்றரை மாதங்களாக பல கட்டங்களாக, ரூ.27 லட்சம் வரை கொடுத்தனர். ஆனால், இரிடியம் கலசத்தை தரவில்லை.



இதுகுறித்து கேட்ட போது, கோவை ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த முருகேசனிடம் இரிடியம் கலசம் உள்ளதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்தார். இதையடுத்து கோவை வந்த மகரூப், அப்துல் கலாம் ஆகியோர் முருகேசனை சந்தித்தனர். இந்நிலையில், முருகேசன் இரிடியம் கலசத்தை காண்பித்த போது சந்தேகம் அடைந்த இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இதில், முருகேசன் இருவரையும் கத்தியால் குத்த முயன்றார். அங்கிருந்து தப்பிய இருவரும் கோவை மாவட்ட போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஆறு பேரை கைது செய்தனர்.


கோவை மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் கூறியதாவது:


பொதுவாக பணம் சம்பாதிக்கும் எண்ணம் உள்ளவர்களை இலக்காக கொண்டே இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன. இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் என்ற விசயங்களே இல்லை. இவையனைத்தும் மக்களை ஏமாற்றும் வேலை. கோவையை சேர்ந்த முருகேசன், 36 குழுவுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். குழுவில், திருப்பூரை சேர்ந்த போஜராஜ். 42, ராணிப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், 34, சூர்யாகுமார், 22, கோவையை சேர்ந்த செந்தில்குமார், 41, வெங்கடேஷ்பிரபு, 26 ஆகிய ஆறு பேர் இருந்தனர்.



இவர்களில் தினேஷ்குமார், இரிடியம் பரிசோதனை செய்யும் நிபுணராக நடித்துள்ளார். மற்றவர்கள் பாதுகாப்புக்காக அழைத்து வந்துள்ளனர். இக்கும்பல் இரிடியம் விற்பதாக கூறித் தான் மகரூப், அப்துல்கலாமிடம் பணம் பெற்றுள்ளனர். ஆனால், உண்மையில் இக்கும்பல் இரிடியத்தை விற்கவோ, வாங்கவோ செய்யாது. இரிடியம் நடவடிக்கைகள் உண்மை என நம்ப வைக்க கள்ள நோட்டுகளை பயன்படுத்தியுள்ளனர். கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., ஆனந்த் ஆரோக்யராஜ் தலைமையில் , மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட தனிப்படையினர் ஆறு பேரையும் கைது செய்தனர்.



தலைமறைவாக உள்ள ஷாஜியை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தினேஷ்குமார் மீது ஏற்கனவே புதுக்கோட்டையில் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. முருகேசன் கொலை வழக்கு உள்ளது. இவர்களிடம் இருந்து, ரூ.99.20 லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கத்தி, போலி கவச உடை, இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
22-அக்-202113:58:12 IST Report Abuse
தஞ்சை மன்னர் இன்னும் பத்து சதுரங்க ஆட்டம் படம் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22-அக்-202108:27:29 IST Report Abuse
NicoleThomson இலவசமாக தின்னு உடம்பை வளர்த்த கும்பல் எப்படி இருப்பாங்க என்பதற்கு இந்த கூட்டம் உதாரணம், இனி இவர்களுக்கு இடஒதுக்கீடு, இலவசங்கள் எதுவும் பொருந்தாது என்று ஒரு சட்டம் போடுங்க ஸ்டாலின் , மோடி அவர்களே
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
22-அக்-202113:59:12 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி அண்ணனுக்கு எப்பவும் குல்ல மேல கண்ணு போல...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-அக்-202103:19:28 IST Report Abuse
J.V. Iyer ஏமாறுபவர்கள் இருக்கும்வரையில், ஏமாற்றுக்காரர்களுக்கு கொண்டாட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X