'கேங்மேன்' தேர்வர்கள் 2வது நாளாக போராட்டம் | செய்திகள் | Dinamalar
'கேங்மேன்' தேர்வர்கள் 2வது நாளாக போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
00:16

சென்னை:மின் வாரியத்தில் 'கேங்மேன்' தேர்வு எழுதி வேலை கிடைக்காதவர்கள், இரண்டாவது நாளாக, சென்னை மின் வாரிய அலுவலகத்தில் நேற்றும் போராட்டம் நடத்தினர்.



இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:'கேங்மேன்' வேலைக்கு முதலில் 5,000 பேர் தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. பின், சேலம், நாமக்கல், கோவையைச் சேர்ந்தவர்கள் பயன் பெற, கூடுதலாக 5,000 பேர் தேர்வு செய்வதாக அறிவித்தனர்.எழுத்து தேர்வில் பங்கேற்றவர்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, இட ஒதுக்கீட்டின்படி வேலை வழங்கப்பட்டது.

ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவருக்கு வேலை வழங்கியதாக, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.குறைந்த மதிப்பெண் எடுத்தவருக்கு எப்படி வேலை வழங்கப்பட்டது என்பதை கண்டறிந்து, முறைகேடில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனாலும், தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும் எப்படி வேலை வழங்க முடியும்?இதனால், என்ன முடிவாக இருந்தாலும் வெளிப்படையாக கூறி, போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X