பரதநாட்டிய பயிற்சி சான்றிதழ் வழங்கல் | செய்திகள் | Dinamalar
பரதநாட்டிய பயிற்சி சான்றிதழ் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:01

அரியாங்குப்பம்-பாரதியார் பல்கலைக்கூடத்தில் பரதநாட்டிய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது.அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக் கூடத்தில் தில்லானா பரதநாட்டிய பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் 20ம் தேதி துவங்கியது.இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், வெளி மாநிலங்களில் இருந்து 37 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரதநாட்டிய பயிற்சி பெற்றனர்.காரைக்காலை சேர்ந்த கலை பண்பாட்டு குழு சார்பில் டாக்டர் பாலகுருநாதன் பயிற்சி அளித்தார். நேற்று நடந்த நிறைவு நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கூட முதல்வர் போஸ் பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X