எதிர்பார்ப்பு ; ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படுமாஆய்வு செய்ய மத்திய குழு இன்று வருகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:06

புதுச்சேரி-புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் உணவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழு இன்று வருகிறது.



எனவே,ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படுமா என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ -35, தனியார் -25 என மொத்தம் 377 ரேஷன் கடைகள் இயங்கி வந்தன.இந்த ரேஷன்கடைகள் மூலம் கடந்த காலங்களில் மாதந்தோறும் ரேஷன்கார்டு தாரர்களுக்கு இலவச அரிசி, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, பொங்கல் பண்டிகைக்கு இலவச பொருட்கள், பேரிடர்கால நிவாரண உதவி ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.



கடந்த காங்., ஆட்சியில், அரசுக்கும், கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப் பட்டது.ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 42 மாதங்களாக சம்பளம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட் டணி ஆட்சி அமைந்துள் ளது. புதிதாக பொறுப்பேற்ற அரசு, மீண்டும் இலவச அரிசியை ரேஷன்கடைகள் மூலம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.மத்திய உணவுத் துறை அமைச்சகம், ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை வினியோகிக்க அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தது.இந்நிலையில் புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரி ராஜன் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று (22ம் தேதி) வருகை தர உள்ளனர்.



புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் உணவுக்கான நேரடி மானிய பணம், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ இலவச அரிசி திட்டம் குறித்து விவாதித்து, மறு ஆய்வு செய்ய உள்ளனர்.'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் வாங்க முடியும்.இதன்படி புதுச்சேரியில் தங்கியுள்ள வட மாநில மக்களிடம், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு கருத்து கேட்கப்பட்டது.புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்காததால், இத்திட்டத்தில் சேர வட மாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் மாநிலத்திலேயே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.



நேரடி மானிய திட்டத்திற்கு பதிலாக, மீண்டும் இலவச அரிசி, மளிகை பொருட்களை ரேஷன் கடைகள் வாயிலாக வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் மத்திய குழுவிடம் வலியுறுத்த திட்டமிடப் பட்டுள்ளது.எனவே, புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X