ரூ.125 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம் | செய்திகள் | Dinamalar
ரூ.125 கோடி பிணைய பத்திரங்கள் ஏலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:07

புதுச்சேரி---புதுச்சேரி அரசின் நிதித்துறை மூலம், ரூ.125 கோடி மதிப்புள்ள பிணைய பத்தி ரங்கள் ஏலம் விடப்பட உள்ளது.இதுகுறித்து புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, ரூ. 125 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 6 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய்க்கும், அதன் பின்னர் 10 ஆயிரம் மடங்குகளிலும் ஏலம் விடப்படும்.இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பை யில் உள்ள, அதன் மும்பை கோட்ட அலுவலகத்தில், வரும் 26ம் தேதி நடைபெறும்.அரசு பிணைய பத்திரங்களுக்கு, ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்படக்கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை அதாவது ஏப். 27ம் தேதி மற்றும் அக்.27 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.இந்த பிணைய பத்திரங்கள் மாற்றிக் கொடுக்கத்தக்க தகுதியுடையதாகும்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X