மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது | செய்திகள் | Dinamalar
மருத்துவமனைகளில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்தது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:08

புதுச்சேர-புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 2,953 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் புதிதாக 43 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது.கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பால் தினமும் 200 பேருக்கு குறையாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, நேற்று 100 பேராக இருந்தது. வீட்டு தனிமையில் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 258 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 1,852 பேர் இறந்துள்ளனர்.தொற்று சதவீதம் 1.46, இறப்பு சதவீதம் 1.45, குணமடைந்தோர் சதவீதம் 98.19 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 1025 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 3476 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்.இதுவரை 10 லட்சத்து 89 ஆயிரத்து 46 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X