சிவில் சப்ளை அலுவலகம் முன்பு அமர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் தர்ணா போராட்டம் | செய்திகள் | Dinamalar
சிவில் சப்ளை அலுவலகம் முன்பு அமர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:09

புதுச்சேரி-சிவில் சப்ளை அலுவலகத்தில், இயக்குனர் அறை முன்பு அமர்ந்து ரேஷன் கடை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரி பிராந்தியத்தில் 325 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் நிரந்தர பணியாளர்கள் 120 பேர் உட்பட 600க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியற்றி வந்தனர். கடந்த ஆட்சியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன.கொரோனா காலத்தில், மத்திய அரசு சார்பில் சிவப்பு ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இப்பணியில் ரேஷன் கடை ஊழியர்கள், கடந்த 9 மாதங்களாக ஈடுபடுத்தப் பட்டனர். அதற்கான ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. தீபாவளி பண்டிகை வருவதால், 2 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று, ரேஷன் கடை ஊழியர் சங்கத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தட்டாஞ்சாவடியில் உள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில், இயக்குனர் அறை முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கோரிமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இயக்குனரை சந்தித்த பிறகே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.பின்னர் இயக்குனரை சந்தித்து 2 மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தினர்.இயக்குநர், 'மத்திய அரசு வழங்கும் அரிசி முறையாக வழங்கப்படுகிறதா, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று மத்திய குழுவினர் வருகின்றனர். அவர்களிடம் உங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்' என தெரிவித்தார்.இதை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X