லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி | செய்திகள் | Dinamalar
லாரி மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:10

காரைக்கால்-காரைக்காலில் லாரி மோதியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் உயிரிழந்தார்.காரைக்கால் திருநள்ளாறு சேத்துார் அருகில் உள்ள தமிழகப் பகுதியான குருநாதபுரத்தை சேர்ந்தவர் காமராஜ் மகன் சூர்யா (19). தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன்(20).இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திருநள்ளாறு அருகே சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர். பின்னால் வந்த லாரியில் சிக்கிய சூர்யா சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.காயமடைந்த சுந்தர்ராஜன் அரசு மருந்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.போக்குவரத்து சப்.இன்ஸ்பெக்டர் தனபால் வழக்கு பதிந்து, லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த கேசவன் என்பவரை கைது செய்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X