புதுச்சேரி-நகரப்பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் நேற்று காலை, நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.அரவிந்தர் வீதி, துமாஷ் வீதி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்தார். தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, பொதுப்பணி துறை செயற் பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.முருங்கப்பாக்கத்தில் உள்ள கலை மற்றும் கைவினை கிராமம் அருகே உள்ள படகு குழாமை மேம்படுத்துவது குறித்து, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு செய்தனர்.அரியாங்குப்பம் எம்எல்.ஏ., பாஸ்கரன், சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.