புதுச்சேரி ஓட்டல்களில் இட்லி விலை உயர்வு | செய்திகள் | Dinamalar
புதுச்சேரி ஓட்டல்களில் இட்லி விலை உயர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:11

புதுச்சேரி-புதுச்சேரி நடுத்தர ஓட்டல்களில் இட்லி உள்ளிட்ட உணவுப் பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சிறிதும் பெரிதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. நடுத்தர மற்றும் சிறிய கம்பெனிகளில் குறைந்த வருமானத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சாலையோர மற்றும் நடுத்தர உணவகங்களில், தினசரி காலை, இரவு நேர உணவு சாப்பிடுகின்றனர்.இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை, பாமாயில், சன்பிளவர் ரிபைன்ட் ஆயில் விலை உயர்வு காரணமாக, ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை உயர்த்தப் பட்டுள்ளது.சாதாரண உணவகத்தில் ரூ.5க்கு விற்பனையான ஒரு இட்லியின் விலை, தற்போது ரூ. 6 ஆக உயர்ந்துள்ளது. ரூ. 20, 25க்கு விற்ற பூரி கிழங்கு, ரூ. 25, ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ரூ. 25க்கு விற்ற தோசை, ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது. மதிய சாப்பாடு விலையும் ரூ. 10 உயர்ந்துள்ளது. நடுத்தர, உயர்தர உணவகங்களும் தங்களின் உணவு பொருட்களின் மீதான விலையை ரூ. 2 முதல் ரூ. 10 வரை உயர்த்தி உள்ளன.சில உணவகங்கள் விலை உயர்த்தாமல், பழைய விலையில் விற்பனை செய்கின்றன. டீ விலை உயர்த்தப்படாமல் இருப்பது மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X