மாதம் ஒரு மருத்துவ முகாம் | செய்திகள் | Dinamalar
மாதம் ஒரு மருத்துவ முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:12

புதுச்சேரி-மாதம் ஒரு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என முதல்வரிடம் மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் தேவநாதன், பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அகில இந்திய அளவில் இலவச தொலைபேசி எண்ணாக 14567 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால், சமூகம், மருத்துவம், சட்டம், ஆதரவு போன்ற சேவைகள் எந்நேரமும் அளிக்கப்படுகிறது. இதனை புதுச்சேரி மக்களிடம் அரசு கொண்டு செல்ல வேண்டும்.புதுச்சேரியில் கடந்த 21 ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் நல்வாழ்வு சங்கம் செயல்பட்டு வருகிறது. 1200க்கும் மூத்த குடிமக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லுாரிகளுடன் இணைந்து மாதம் ஒரு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் பயன் பெறுவர்.சங்கத்திற்கு நிலையான கட்டட வசதி இல்லை. மாநில அரசு இடம் அல்லது கட்டடம் சங்கத்திற்கு ஒதுக்கித் தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X