ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யும் பணி துவங்கியது | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யும் பணி துவங்கியது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:15

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் சட்டசபை தேர்தல் 2021ல் பயன்படுத்தப்படாத ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்கள் ஸ்கேன் செய்யும் பணி துவங்கியது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படாத ஓட்டுப்பதிவு மின்னணு இயந்திரங்களை உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்புவதற்காக ஸ்கேன் செய்யும் பணி நேற்று துவங்கியது.அதன்படி, தச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை கலெக்டர் ஸ்ரீதர், அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று திறந்தார்.தொடர்ந்து அங்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள்-420 மற்றும் ஓட்டுப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள்-530 ஆகியவற்றினை இ.எம்.எஸ்., எனும் ஸ்கேனிங் முறையில் ஆய்வு செய்யும் பணி நடந்தது.ஸ்கேனிங் பணி முடிந்ததும், அனைத்து இயந்திரங்களும் உத்தரபிரதேச மாநிலம் எட்வா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். தாசில்தார் பாலசுப்ரமணியன் உடனிருந்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X