சிக்கல்; சேர்மன் பதவிக்கு இருவர் போட்டியால்...ஒலக்கூர் ஒன்றிய தி.மு.க.,வில் குழப்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 அக்
2021
04:53
பதிவு செய்த நாள்
அக் 22,2021 03:18

திண்டிவனம்-ஒலக்கூர் ஒன்றிய சேர்மனுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், தி.மு.க.,வில் இருவர் போட்டியில் இருப்பதால், யாரை தேர்வு செய்வது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.



விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்களில், தி.மு.க., 7, அ.தி.மு.க., 3, பா.ம.க., 2, சுயேச்சைகள் 4 என 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சுயேச்சைகளாக வெற்றி பெற்ற 3 பேர் தி.மு.க.,வில் சீட் கிடைக்காததால் அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.மயிலம், வானுார், மரக்காணம் ஒன்றிய சேர்மன் பதவி யாருக்கு என கட்சியில் முன்கூட்டியே முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.



ஆனால், ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் பதவி நேற்று வரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 10:00 மணிக்கு ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.தி.மு.க., சார்பில் ஒன்றிய சேர்மன் பதவிக்கு ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இருவரும் அமைச்சர் மஸ்தான் ஆதரவாளர்கள்.இருவரில் கட்சி சார்பில் யார் ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய சேர்மன் பதவிக்கு 9 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை.தி.மு.க.,வில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். கூடுதலாக இரண்டு கவுன்சிலர்களின் ஆதரவு தேவை. இதனால் ராஜாராம், சொக்கலிங்கம் ஆகிய இருவரும் வெற்றி பெற்ற கவுன்சிலர்களிடம் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டு வருகின்றனர். இதனால் கட்சி நிர்வாகிகளுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.இதுபோல்தான் மரக்காணத்தில் தி.மு.க.,சார்பில் ஒன்றிய சேர்மன் பதவி ஒருவரது பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால், தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஒருவர் தன்னுடைய ஆதரவு கவுன்சிலர்களை திரட்டி வைத்துக்கொண்டு, ஒன்றிய சேர்மன் பதவியை தனக்கு வேண்டும் என்று கேட்பதால், யாரை தேர்வு செய்வது என கட்சி தலைமைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.2 சுயேச்சை கவுன்சிலர் ஆதரவுஒலக்கூர் ஒன்றியம் ஈச்சேரியைச் சேர்ந்த சேகர், பா.ம.க.,வில் இருந்து அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தவர். இவர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பில் போட்டியிட சீட் கேட்டும், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.



இதனால் சேகர் கீழ்கூடலுார் பஞ்சாயத்து தலைவராகவும், சேகர் உறவினர்கள் 2 பேர் 10 மற்றும் 15 வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சொக்கலிங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த சேகர் நேற்று வெளியிட்டுள்ள 'வாட்ஸ் ஆப்' ஆடியோவில், 'தி.மு.க., ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கத்திற்கு 2 சுயேச்சை ஆதரவு உண்டு' என தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X