கிராம வங்கியில் நிதிசார் கல்வி முகாம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கிராம வங்கியில் நிதிசார் கல்வி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:22

கள்ளக்குறிச்சி-தமிழ்நாடு கிராம வங்கி அதையூர் கிளை சார்பில் நிதிசார் கல்வி முகாம் நடந்தது.அ.கொளத்துார் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு வங்கி கிளை மேலாளர் சுபா விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். துணை மேலாளர் கவுதம் முன்னிலை வகித்தார். காசாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.முகாமில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி கடன் சேவைகள் குறித்தும், வங்கி மூலம் வழங்கப்படும் நிதி திட்டங்கள் குறித்தும் விளக்கவுரை வழங்கப்பட்டது.வங்கி உதவியாளர் விக்னேஷ், நகை மதிப்பீட்டாளர், வெங்கடேஷ், வணிக முகவர்கள் நந்தீஷ், ஜெயமணி மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.புக்கிரவாரியில், நடந்த முகாமிற்கு, கிளை மேலாளர் திருமால் தலைமை தாங்கி, வங்கி கடன் சேவைகள் மற்றும் நிதி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். காசாளர் சதிஷ்குமார் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியை சுசிலா, உதவி தலைமையாசிரியை சங்கீதா ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் கோவிந்தராஜ், சொர்னாம்பிகை, வங்கி உதவியாளர் காந்தமணி, நகை மதிப்பீட்டாளர் அர்ஜூன், வணிக தொடர்பாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X