கள்ளக்குறிச்சி-க.மாமனந்தல் கிருஷ்ணா நகர் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.மனு விபரம்:கிருஷ்ணா நகர் பகுதியில் 3 தெருக்களில் சாலை, தெருமின்விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுகிறது.சாலைகளில் உள்ள பள்ளங்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் விழும் நிலை உள்ளது.மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமாக உள்ளது. கழிவுநீர் கால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, கிருஷ்ணாநகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால், சாலை மற்றும் தெருமின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.