விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதிக் கட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:28

விழுப்புரம்-விழுப்புரம் அரசு கலைக்கல்லுாரியில் இறுதிக் கட்ட கலந்தாய்விற்கான விண்ணப்பம் பெற மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 2021-22ம் கல்வியாண்டிற்கான இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்காக இறுதிக் கட்ட கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது.இதற்காக, டி.என்.ஜி.ஏ.எஸ்.ஏ., என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இறுதிகட்ட மாணவர் சேர்க்கையில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதற்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கல்லுாரி வளாகத்தில் வழங்கப்பட்டது.இந்த விண்ணப்பங்களை வாங்குவதற்கு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் குவிந்தனர். பின், கல்லுாரி நிர்வாகத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X