7ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர் கைது: இன்றைய கிரைம் ரவுண்ட் அப்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 அக்
2021
03:33
பதிவு செய்த நாள்
அக் 22,2021 03:32

இந்திய நிகழ்வுகள்:
விபத்தில் தப்பிய விமானி
குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள மஹாராஜபுரா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தரையை நோக்கி விமானம் வேகமாக பாய்ந்தது. உடனே விமானி பாராசூட் வாயிலாக பத்திரமாக தரையிறங்கினார். விமானம், வயல்வெளியில் விழுந்து தீப் பிடித்தது. இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மின்னல் தாக்கி இருவர் பலி
மால்டா: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனிருஜமான், அமிர் உசேன் ஆகியோர், வயலில் களை பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென மின்னல் தாக்கியதில், இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.குழந்தை கடத்தல்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூ., உறுப்பினர் ஜெயச்சந்திரன் மகள் அனுபாமா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இவர், தன், 1 வயது குழந்தையை தந்தை கடத்திச் சென்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.இதையடுத்து ஜெயச்சந்திரன் உட்பட, அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மலையேற்ற வீரர்கள் பலி
உத்தரகாசி: உத்தரகண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், மூன்று சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர். இவர்கள் 11 பேரும் திடீரென காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். விமானம் வாயிலாக தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது 4,500 அடி உயரத்தில் இருவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற வர்களை தேடும் பணி தொடர்கிறது.மாணவனை அடித்துக் கொன்ற ஆசிரியர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் ஏழாம் வகுப்பு மாணவனை ஈவிரக்கமின்றி அடித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டம் கேலசர் நகரைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரின், 13 வயது மகன், தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில், அடிக்கடி காரணமின்றி ஆசிரியர் அடிப்பதாக, தந்தையிடம் மாணவன் புகார் தெரிவித்துள்ளான். ஆனால் அதை தந்தை அலட்சியப்படுத்தி உள்ளார். சம்பவத்தன்று வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த மாணவனை, ஆசிரியர் மனோஜ் குமார் சரமாரியாக பிரம்பால் அடித்துள்ளார். அத்துடன் கை முஷ்டியாலும் கடுமையாக தாக்கியுள்ளார். இதைஅடுத்து மாணவன் மயங்கி விழுந்துள்ளான்.உடனே மனோஜ் குமார், ஓம் பிரகாஷுக்கு போன் செய்து, சிறுவன் மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். ஓம் பிரகாஷ் பதைபதைப்புடன் 'மகன் உயிரோடு இருக்கிறானா' எனக் கேட்டு உள்ளார். அதற்கு, அவன் இறந்தது போல நடிப்பதாக, மனோஜ் குமார் கூறியுள்ளார். பள்ளிக்கு விரைந்து வந்த ஓம் பிரகாஷ், மகன் இறந்தது தெரிய வந்ததும் கதறி அழுதார். இது குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், ஆசிரியர் மனோஜ் குமாரை கைது செய்தனர். ஆசிரியர், கருணையின்றி மாணவனை அடித்துக் கொன்றது ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக நிகழ்வுகள்:
ஆண் குழந்தை சூட்கேசில் வைத்து ஓடையில் வீச்சு
அரக்கோணம்:அரக்கோணம் அருகே, பிறந்த இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை சூட்கேசில் வைத்து ஓடையில் வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே பாணாவரம் அருத்த தப்பூர் கிராமத்தில் உள்ள ஓடை கால்வாயில் சூட்கேஸ் ஒன்று இன்று இரவு 7:00 மணிக்கு மிதந்து கொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பாணாவரம் கிராம நிர்வாக அலுவலர் சுமன் சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தார். அதில் பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் அழுது மூச்சு திணறிக் கொண்டிருந்தது.சூட்கேசில் நைட்டி, டவல் இருந்துள்ளது. பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பறப்பட்டது. பின் பாணாவரம் போலீசார் முன்னிலையில் சைல்டு ஹல்ப் லைன் குழுவினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.பாணாவரம் போலீசார வழக்கு பதிவு செய்து குழந்தையை வீசி விட்டு சென்றவர்களை தேடி வருகின்றனர்.டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
கோவை: கோவை மாவட்டம், பி.என்.பாளையம் நாயக்கனுாரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 32; டாக்சி டிரைவர். திருமணமான இவர், 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியை பி.என்.பாளையம் போலீசார் மீட்டனர். ஆனந்தகுமாரை 'போக்சோ'சட்டத்தில், 2017 மே., 5ல் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குலசேகரன் விசாரித்து, ஆனந்தகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.தம்பதி தற்கொலை
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் கார்த்திக், 31; டிப்பர் லாரி டிரைவர். மனைவி ப்ரியா, 28. கார்த்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், ப்ரியா கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு கார்த்திக் அருகில் உள்ள கடைக்கு சென்றார். அந்த நேரத்தில், ப்ரியா மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த கார்த்திக், அதிர்ச்சி அடைந்து, அருகில் உள்ள வேப்பமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ரூ.14 லட்சம் 'குட்கா': சிறுவன் கைது
ஓமலுார் : சேலத்தில், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், சிறுவனை கைது செய்தனர்.கர்நாடகாவில் இருந்து மினி லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவுக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது. ஓமலுார் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார், கமலாபுரத்தில் இரும்பு தடுப்பு வைத்து சோதனை செய்தனர். அப்போது வந்த லாரியை நிறுத்தி, ஆவணங்களை சரிபார்த்த போது, லாரியை ஓட்டி வந்த முருகன், 50, தப்பி ஓடி விட்டார். உடனிருந்த 18 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர். லாரியில் பிளாஸ்டிக் பண்டல்களுக்கு கீழ், 40 மூட்டைகளில் 1,175 கிலோ, 'ஹான்ஸ்' பாக்கெட்டுகள் இருந்தன. அதன் மதிப்பு, 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்.புகையிலை பொருட்களை, லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார், சிறுவனை கைது செய்தனர். டிரைவரை தேடுகின்றனர்.விமானத்தில் 'தம்': தஞ்சை பயணி கைது
சென்னை : துபாய் விமானத்தில், தடையை மீறி சிகரெட் பிடித்த தஞ்சாவூர் பயணியை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.துபாயிலிருந்து சென்னைக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' சிறப்பு விமானம், 149 பயணியருடன் வந்தது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ரபீக், 53, என்பவர் பயணம் செய்தார்.விமானம் நடுவானில் பறந்தபோது, முகமது ரபீக் தன் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட் மற்றும் 'லைட்டரை' எடுத்து, புகை பிடிக்கத் துவங்கி உள்ளார். சக பயணியரும், விமான பணிப் பெண்களும் கண்டித்தனர்.அதை கண்டுகொள்ளாமல், ரபீக் தொடர்ந்து புகை பிடித்துள்ளார். 'செயின் ஸ்மோக்கர் என்பதால், என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது' எனக் கூறி, அவ்வப்போது கழிவறைக்கு சென்று புகை பிடித்துள்ளார்.சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி புகார் தெரிவித்தார். விமானம் அதிகாலை 3:00 மணிக்கு தரை இறங்கியதும், முகமது ரபீக்கை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.உலக நிகழ்வுகள்:
எரிவாயு கசிவு: 4 பேர் பலி
பீஜிங் : சீனாவில் உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான சீனாவின் லியானிங் மாகாண தலைநகர் ஷென்யாங்கில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடத்தில் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று திடீரென பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது.இதில் அந்த கட்டடம் பலத்த சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் குழாய் வழியாக எரிவாயு சப்ளை செய்யும் பணிகள் நடந்து வந்தன. அதனால், எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.நேபாளத்தில் மழை: 88 பேர் பலி
காத்மாண்டு : நேபாளத்தில் தொடர் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.நம் அண்டை நாடான நேபாளத்தில் மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மலைப்பாங்கான பகுதிகள் பலவற்றில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.நேபாளத்தின் கிழக்கில் பஞ்ச்தார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர். லாம், தோதி மாவட்டங்களில் 13 பேரும், கலிகோட், பைதாடி உள்ளிட்ட மாவட்டங்களில் 15 பேரும் பலியாகியுள்ளனர்.இது தவிர நேற்று முன்தினம் எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று மேலும் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.இதற்கிடையே பஜ்ஹங் மாவட்டத்தில் காணாமல் போன 21 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
26-அக்-202118:49:02 IST Report Abuse
Vijay D Ratnam பள்ளிச்சிறுவனை அடித்துக்கொன்ற அந்த ஆசிரியருக்கு ஆயுள்தண்டனையும், பத்துலட்ச ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மரணதண்டனை என்று தண்டனை வழங்கவேண்டும். இறந்த மாணவன் குடும்பத்துக்கு மாநில அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும். அவனது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். வீடு ஒன்று வழங்கவேண்டும். நம்ம தமிழ்நாட்டுல தன் புள்ளைய தன் வீட்டு தோட்டத்துல, தான் தோண்டி மூடாமல் விட்டு வைத்த போர்வெல் குழியில் விழுந்ததுக்கே இங்கே மீடியாக்கள் இன்னா குதி குதிச்சது.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
26-அக்-202111:35:48 IST Report Abuse
Nellai tamilan செத்தவர் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்வதே என் வாழ்க்கையின் லட்சியம் என்று சொன்ன ராகுல் ராஜஸ்தான் வராமல் இருப்பது ஏன்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-அக்-202114:01:50 IST Report Abuse
தமிழ்வேள் மாணவன் துடி துடித்து செத்தது போல , அடித்த வாத்தியாரையும் பொது இடத்தில் சாகும்வரை பிரம்பால் அடித்தே மரண தண்டனை நிறைவேற்றவேண்டும் ...தாக்கத்த்துக்கு தண்ணீர்கேட்டால் உப்புக்கரைத்த தண்ணீரை கொடுத்து மீண்டும் மீண்டும் அடிக்கவேண்டும் ....இந்த ஆள் திமுகவுக்கு சரியான தொண்டனாக இருப்பான் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X