உயர்கிறது ; கோமுகி அணையின் நீர்மட்டம்...விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
03:34

கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கச்சிராயபாளையம் பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் நெல், கரும்பு, மரவள்ளி, பருத்தி, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா, ஆணி கார், மாசி கார் என மூன்று போகங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது



.இப்பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக கல்வராயன் மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை அமைந்துள்ளது. 1963ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் 13 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட 46 அடி உயரம் மற்றும் 560 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. கல்வராயன்மலைப் பகுதியில் உள்ள 290 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெய்யும் மழை நீர் முழுதும் பொட்டியம், கல்படை, பரங்கிநத்தம் ஆகிய 3 ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் சேகரமாகிறது.கோமுகி ஆற்றில் உள்ள வடக்கனந்தல் முதல் வேளாக்குறிச்சி வரை உள்ள 12 அணைக் கட்டுகளின் மூலம் 43 ஏரிகள் நீர் ஆதாரம் பெறுகிறது. கோமுகி அணையின் பழைய மற்றும் புதிய பாசனத்தின் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.கோமுகி அணையிலிருந்து ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை 150 நாட்கள் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதியில் சம்பா சாகுபடியில் 6 மாத பயிரான பொன்னி நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்றது.சில ஆண்டுகளாக போக்கு காட்டும் பருவ மழையால் கோமுகி அணை நிரம்புவதில் காலதாமதம் ஏற்படுவதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து 60 முதல் 70 நட்கள் வரை மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் சம்பா சாகுபடியில் நீண்ட நாள் பயிரான பொன்னி நெல் சாகுபடியைத் தவிர்த்து தற்போது 90 நாட்களில் விளையும் குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே அணை முழு கொள்ளளவை எட்டியது.



இதனால் அக்டோபர் 1ம் தேதியே சம்பா சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடையும் நிலையிலும் அணை நிரம்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சில தினங்களாக கோமுகி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோமுகி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.தற்போது அணையில் 41 அடி வரை உயர்ந்து 393 மில்லியன் கன அடி நீர் நிரம்பியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X