மல்லுக்கட்டு! ஊராட்சிகளில் இன்று மறைமுக தேர்தல் தலைவர், துணை தலைவர் பதவிக்கு 'குஸ்தி' கவுன்சிலர்கள் 'காட்டில் பண மழை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:12

' -காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

\


இந்த பதவிகளை பிடிக்க, லட்சங்களை செலவழித்து, கவுன்சிலர்களை 'கவனித்து' உட்கட்சிகளிலேயே பலர் முட்டி மோதுவதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. பரபரப்புஇதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள், நேற்று முன்தினம் பதவிஏற்றனர்.



இன்று நடைபெறும் மறைமுக தேர்தலில், மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக, சென்னை புறநகரில் உள்ள குன்றத்துார், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.இந்நிலையில், மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று, எப்படியாவது பதவிகளை பிடித்து விட வேண்டும் என, ஒரே கட்சியைச் சேர்ந்த பலர் முட்டி மோதுவதால், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தின், ஒன்றியக்குழு தலைவராக, ஒன்றிய செயலர் மனோகரனின் மனைவி சரஸ்வதி தேர்வாக வாய்ப்புள்ளது. துணை தலைவர் பதவிக்கு, தி.மு.க., -- காங்., இடையே போட்டி நிலவுகிறது.



உத்திரமேரூர் ஒன்றியத்தில், உத்திரமேரூர் தி.மு.க., ஒன்றிய செயலர் ஞானசேகரனின் மனைவி ஹேமலதா, சாலவாக்கம் ஒன்றிய செயலர் குமாரின் மனைவி வசந்தி, தி.மு.க., வர்த்தக அணி அமைப்பாளர் ரவியின் மனைவி சந்திரா ஆகியோரிடையே மும்முனை போட்டி உள்ளது. ஹேமலதாவுக்கு தலைவர் பதவியையும், வசந்திக்கு துணை தலைவர் பதவியையும், மாவட்ட செயலர் சுந்தர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 16 இடங்களில், ஒரு இடத்தில் சுயேச்சையாக வெற்றி பெற்ற ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள், ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க முயன்று வருகிறார். இவருக்கு அ.தி.மு.க.,வின் ஐந்து கவுன்சிலர்கள் உறுதுணையாக உள்ளனர். இரு சுயேச்சைகளை தங்கள் வசம் இழுக்க குணா முயற்சித்த நிலையில், அதில் ஒருவரை தி.மு.க.,வினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்துள்ளனர்.

\\


எட்டு இடங்களை பிடித்த தி.மு.க., ஒரு காங்., நபரையும் மறைத்து வைத்துள்ளது. தி.மு.க., சார்பில் ஒன்றிய செயலர் கருணாநிதி தலைவராக முயற்சிக்கிறார்.போட்டிமதுராந்தகம் ஒன்றியத்தின் 22 கவுன்சிலர்களில், தி.மு.க.,வுக்கு 10 பேர் மட்டுமே உள்ளனர். அ.தி.மு.க.,வில் ஏழு பேர் இருப்பதால், பா.ஜ., மற்றும் சுயேச்சைகளை கவர்ந்து, தலைவர் பதவியை பிடிக்க, அ.தி.மு.க.,வினர் பேரம் நடத்தி வருகின்றனர்.அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில், தி.மு.க.,வில், தெற்கு, வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் தலைவர் பதவிக்கு மல்லுகட்டுகின்றனர்.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய கவுன்சிலருமான ஆர்.டி.அரசுவுக்கும், 8ம் வார்டு விட்டிலாபுரம் சகாதேவனுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது.லத்துார் ஒன்றியத்திலும், தி.மு.க.,வின் இரண்டு பெண் கவுன்சிலர்கள், தங்கள் பக்கம் கவுன்சிலர்களை இழுப்பதில் தீவிரமாக உள்ளனர்.திருப்போரூர் ஒன்றிய தலைவர் பதவிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மன் குறி வைத்துள்ளார். இங்கும் பலத்த போட்டி உள்ளது.பரங்கிமலை ஒன்றியத்தில், நன்மங்கலம் சங்கீதா, மதுரப்பாக்கம் அமுதா வேல்முருகன், மேடவாக்கம் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மத்தியில் தலைவர், துணை தலைவர் பதவியை பிடிக்க பலத்த போட்டி நிலவுகிறது.உட்கட்சிக்குள் போட்டி, தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி உள்ள இடங்களில், போட்டியில் இல்லாத கவுன்சிலர்களுக்கு, 'பண மழை' கொட்டி உள்ளது.மறைமுக தேர்தலில் அனல் பறக்கும் என்பதால், தேர்தல் நடைபெற உள்ள ஒன்றிய அலுவலகங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தி.மு.க.,வில் இது சாதாரணமப்பா!குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஒன்றிய கவுன்சிலர்களில், தி.மு.க.,- - 18; அ.தி.மு.க.,- - இரண்டு; காங்., - ஓன்று இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதில், குன்றத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலரான மனோகரனின் மனைவி சரஸ்வதி, தெற்கு ஒன்றிய செயலர் வந்தேமாதரத்தின் மனைவி உமாமகேஸ்வரி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். ஒன்றிய குழு தலைவராக சரஸ்வதி தேர்வு செய்யப்படுவார் என, கூறப்படுகிறது. அதேநேரம், மாவட்ட குழு உறுப்பினராக வெற்றி பெற்ற மனோகரனுக்கு, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உறுதி என்றும் கூறப்படுகிறது.



கணவர், மனைவி இருவருக்கும், மாவட்ட மற்றும் ஒன்றிய குழு தலைவர் பதவிகள் வழங்கப்பட உள்ள தகவல், அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், 'தி.மு.க.,வில் இதெல்லாம் சாதாரணமப்பா' என, அக்கட்சி கவுன்சிலர்களை, அ.தி.மு.க.,வினர் கலாய்த்து வருகின்றனர்.முடிச்சூருக்கு 'செக்'முடிச்சூர் ஊராட்சியில், சுயேச்சை வேட்பாளர் சிந்துலேகா தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட, தி.மு.க.,வின் விநாயகமூர்த்தி மனைவி பொன்மணி தோல்விஅடைந்தார். அதே வேளையில், மூன்றாவது வார்டு உறுப்பினராக விநாயகமூர்த்தி வெற்றி பெற்றார். அவருக்கு ஆறுதலாக துணை தலைவர் பதவியை வழங்க, ஒன்றிய செயலர் ஜெயகுமார், சக வார்டு உறுப்பினர்களிடம் பேசி உள்ளார்.



ஆனால், 'ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் தலைவர், துணை தலைவராக தேர்வானால் எப்படி; மாற்று சமூகத்தினருக்கு வாய்ப்பு வேண்டும்' என, தி.மு.க.,வைச் சேர்ந்த ஏழாவது வார்டு உறுப்பினர் உமா சுகுமார், துணைத் தலைவர் பதவி கேட்கிறார். இவர்களுக்கு மத்தியில், 12வது வார்டு உறுப்பினர், அ.தி.மு.க.,வின் அருளும் போட்டியில் உள்ளார்.


- -நமது நிருபர் குழு-


 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X