பாதாள சாக்கடை திட்டத்தால் சாலை பணிகள் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:22

தாம்பரம்-திருநீர்மலை சாலை பராமரிப்பில் நகராட்சி கமிஷனர் தலையிட்டு, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தாம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், ௨௦௦௮ முதல் துவங்கி நடந்து வருகின்றன. இதற்கான பணிகள், மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலையில் நடந்து வருகின்றன.இச்சாலையில், 1,480 மீட்டர் துாரத்திற்கு, இருபுறமும் விரிவாக்கம் செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்ட மானிய நிதியின் கீழ், 1.75 கோடி ரூபாய் மதிப்பில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்படி, முதற்கட்டமாக ௧,௦௦௦ மீட்டர் துாரத்திற்கு, சாலை இருபுறமும் விரிவாக்கப்பட்டுள்ளது. இன்னும், 480 மீட்டர் துாரத்திற்கு பணிகள் நடைபெறாமல் உள்ளன.திருநீர்மலை சாலை மற்றும் அதன் இருபுறமும் உள்ள உட்புற சாலைகளில், மெட்ரோ நிர்வாகம் குழாய் பதிப்பு பணிகளை மெத்தனமாக செய்து வருவதே, சாலை விரிவாக்கம் மற்றும் புதுப்பிப்பு பணிகள் மந்தமாக நடக்க காரணம் என, நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.நகராட்சி கமிஷனர் தலையிட்டு, இச்சாலை விரிவாக்க பணிகள் மற்றும் புதுப்பிப்பு பணிகளில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, விரைவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X