மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் | சென்னை செய்திகள் | Dinamalar
மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:25

அடையாறு,--வடகிழக்கு பருவமழை காலத்தில், அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் கிண்டி, வேளச்சேரி, தரமணி, கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில், மழை நீரை உடனுக்குடன் வெளியேற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.அடையாறு மண்டலத்தில், பெசன்ட் நகர், திருவான்மியூர், அடையாறு, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இதில், பருவ மழையின் போது கிண்டி, வேளச்சேரி, தரமணி, கோட்டூர்புரம் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருக்கும்.மழைக்கால வெள்ள தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த, சிறப்பு அதிகாரியாக அறிவியல் நகர துணை தலைவர் மலர்விழி நியமிக்கப்பட்டு உள்ளார்.குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தை உடனுக்குடன் வெளியேற்றும் வகையில், 25 முதல் 75 குதிரை திறன்கொண்ட, 34 நீர் இறைக்கும் மோட்டார்கள், மண்டலத்திற்கு வழங்கப்பட்டு உள்ளன.அதிக பாதிப்புக்கு உள்ளாகும் முக்கிய சந்திப்புகளில், மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கும் பணி நடக்கிறது. காற்றில் விழும் மரங்களை அகற்ற, 15 மரம் அறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.அவை, ஒவ்வொரு வார்டு அலுவலகத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல், உணவு தயாரிப்பு கூடங்கள், படகுகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.இதன் மூலம், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X