உடற்பயிற்சி கூடம் திறப்பு இளைஞர்கள் உற்சாகம் | சென்னை செய்திகள் | Dinamalar
உடற்பயிற்சி கூடம் திறப்பு இளைஞர்கள் உற்சாகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
04:25

கிண்டி--கிண்டி பாரதி நகரில் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அடையாறு மண்டலம் 174வது வார்டு, கிண்டி, பாரதி நகரில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பாரதி நகரில் உடற்பயிற்சி கூடம் கட்டிதர வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.அதே பகுதியில், 600 சதுர அடி பரப்பு இடம் உள்ளது. அதில், 1,000 சதுர அடி பரப்பில், இரண்டு மாடியில் உடற்பயிற்சி கூடம் கட்ட, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.சட்டசபை தேர்தலுக்கு முன், கட்டுமான பணி துவங்கியது. கட்டடம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்துவது என, அனைத்து பணிகளும், ஒரு வாரத்திற்கு முன் முடிந்தன.நேற்று முன்தினம், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது. இதனால், பாரதி நகர் பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தினமும், காலை 6:00 முதல், 9:00 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல், இரவு 8:00 மணி வரை உடற்பயிற்சி கூடம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X