உடுமலை:வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், மூன்று இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகா சோழமாதேவி மற்றும் உடுமலை காந்திநகர் 2ல், உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு முகாம், நடந்தது. முகாமில், சார்பு நீதிபதி மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாக்யராஜ் தலைமை வகித்தனர். முகாமில், வக்கீல்கள் பங்கேற்று, மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.அதே போல், உடுமலை வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடந்த முகாமில், நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்று, சட்ட விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் சேவை குறித்து, விளக்கமளித்தனர். இதில், தொழிலாளர் நல ஆய்வாளர் செல்வக்குமார், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பாலநாகமாணிக்கம், மெய்ஞானமூர்த்தி மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.