காட்சிபொருளாக மாறிய டிராபிக் சிக்னல்களை சீரமைக்கலாமே
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
06:34

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர்களில் உள்ள டிராபிக் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் நகர் மட்டுமல்லாது கிராம பகுதிகளிலும் அதிகளவில் டூவீலர் ,கார் உள்ளிட்ட வாகனங்கள் பெருகிவிட்டன. நகர் பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக டூவீலர் , கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் வருகின்றன. பொதுவாக பெரும்பாலான நகரங்களின் பஜார் ,முக்கிய சந்திப்புகளில் ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கி விட்டது. இதனால் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இதை தவிர்ப்பதற்காக சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட அனைத்து நகர்களின் முக்கிய சந்திப்புகளில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகள் எங்குமே செயல்படவில்லை. அனைத்துமே காட்சிப் பொருளாக உள்ளன . வாகனங்கள் முறையாக செல்லாமல் அதில் வருபவர்கள் ஒருவருக்கொருவர் முந்தி சென்றும், காத்திருக்காமல் குறுக்கே புகுந்தும் விபத்துக்கு வழி ஏற்படுத்துகின்றனர். சிறிது நேரம் காத்திருந்து சென்றாலே விபத்தை தவிர்க்கலாம்.



ஆனால் அதற்கு யாருமே தயாராக இல்லை.வேலைக்கோ , ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்னதாகவே கிளம்ப வேண்டும். ஆனால் பெரும்பாலோனோர் தாமதமாக கிளம்பி சிக்னல் உள்ள இடங்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்கின்றனர். நகர்களில் டிராபிக் போலீசாரும் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்களால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தீபாவளி வர உள்ளதால் அனைத்து நகர்களுமே பிஸியாகவே உள்ளன.



பல்வேறு தேவைகளுக்கும் ஏராளமான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. நகர்களில் உள்ள டிராபிக் சிக்னல்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய சந்திப்புகளில் புதியதாக டிராபிக் சிக்னல்களும் அமைக்க வேண்டும்...........



சரிசெய்யுங்க



மாவட்டத்தில் அனைத்து நகர்களிலும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். இதை கட்டுப்படுத்தும் டிராபிக் சிக்னல்களும் செயல்படவில்லை. வாகனங்களில் செல்வோரும் காத்திருக்காமல் ,போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அவசரம் அவசரமாக சென்று விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க சிக்னல்களை செயல்படுத்த முன்வர வேண்டும்.முத்துராஜ், டிரைவர் , சிவகாசி..............

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X