சுத்தமானது பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள்; திறக்கபட்டது தாய்மார்கள் பாலூட்டும் அறை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
சுத்தமானது பஸ் ஸ்டாண்ட் கழிப்பறைகள்; திறக்கபட்டது தாய்மார்கள் பாலூட்டும் அறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
06:35

ராஜபாளையம் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பொதுக்கழிப்பறைகள் உடனடியாக சுத்தப்படுத்தப்பட்டதுன்,அங்குள்ள தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் திறக்கப்பட்டன.



ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டின் பிரச்னைகள் குறித்து தினமலர் நாளிதழ் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் நேற்று, பயணிகளை பதற வைக்கும் புது பஸ் ஸ்டாண்ட் தலைப்பில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக நேற்று காலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் பொதுக்கழிப்பறைகள் மாஸ் கிளீனிங் முறையில் சுத்தப்படுத்தப்பட்டு, தொற்று பாதிக்காமல் இருக்க பிளிச்சிங் பவுடர் போடப்பட்டது.இதே போல் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பயன்படுத்தும் நம்ம டாய்லெட்டில் தண்ணீர் நிரப்பப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. செய்தி வெளியிட்ட 'தினமலர்' நாளிதழுக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X