குப்பைக்கு தீ வைப்பால் மூச்சு திணறல்; கஞ்சநாயக்கன்பட்டியில் பிரச்னைகள் ஏராளம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
குப்பைக்கு தீ வைப்பால் மூச்சு திணறல்; கஞ்சநாயக்கன்பட்டியில் பிரச்னைகள் ஏராளம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
06:36

அருப்புக்கோட்டை : தினம் தினம் குப்பையை தீ வைத்து எரிப்பதால் பலரும் மூச்சு திணறலால் பாதிப்பு, வசதிக்காக ஏங்கும் புற நகர் பகுதிகள் என கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் பாதிக்கின்றனர்.



அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்ததுகஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி. வடக்கு, கிழக்கு உட்பட தெருக்கள், ஆதி திராவிடர் காலனி, ஆர்.கே. நகர், லட்சுமி நகர், ஜெயநகர், பூபால் நகர்,கிருஷ்ணசாமி நகர், ரேணுகா தேவி நகர் உட்பட புற நகர் பகுதிகள் உள்ளன. எங்கு பார்த்தாலும் குப்பை கொட்டி எரிப்பதால் புகை மூட்டமாக காணப்படுகிறது. குப்பை எரித்து, அதிலிருந்து வரும் அசுத்த புகையை மக்கள் சுவாசித்து மூச்சுதிணறல்,பல்வேறு உடல் கோளாறுகளால் சிரமம் படுகின்றனர்.இதில் முதியோர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். இதன் புகையை சுவாசித்து வடக்கு தெருவில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பலமுறை ஊராட்சி தலைவரிடம் மனு கொடுத்தும் பலன் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.இது மட்டுமன்றி ஊர் முழுவதும் சுகாதாரக் கேடாக உள்ளது. ஆதி திராவிடர் காலனியில் சாக்கடை வசதியின்றி கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.தும்பை குளம் கண்மாயில் தேங்கும் கழிவு நீர், மழை காலத்தில் நிறைந்து ஆதி திராவிடர் காலனிக்குள் புகுந்து விடுகிறது. புற நகர் பகுதிகள் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்தவித அடிப்படை வசதிகளும்செய்யப்படவில்லை. பல பகுதிகளில் தெரு விளக்கு இல்லாமல் இரவு நேரங்களில் மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். புறநகர் பகுதிகளில் இருளை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு பயனற்று கிடக்கிறது. எதையும் கண்டு கொள்ளாமல் ஊராட்சி தலைவர் மெத்தனத்தில் உள்ளதோடு, கணவரின் தலையீடு அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X