ஒரு போன் போதுமே! வாகன ஓட்டிகள் திணறல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
ஒரு போன் போதுமே! வாகன ஓட்டிகள் திணறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
06:37

உடுமலை ஏரிப்பாளையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் முன், மழை நீர் வெளியேற வழியில்லாமல், ரோட்டில், தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.ஆர்.குருசாமி, உடுமலை.


குழியால் விபத்து அபாயம்


உடுமலை உழவர் சந்தை அருகில், ரோடு, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.நவநீதன், உடுமலை.


ஆற்றுப்பாலத்தை கவனியுங்க!


மடத்துக்குளம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, அமராவதி ஆற்றுப்பாலத்தில், தெருவிளக்குகளும், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் இரவு நேரத்தில், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ஜி.ராம்குமார், மடத்துக்குளம்


தடுப்பு இல்லாததால் பாதிப்பு


உடுமலை - பழநி ரோட்டில், கழுத்தறுத்தான் பள்ளம் மீது கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு தடுப்பு சுவர் இல்லாததால், அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை காணப்படுகிறது.சி.சண்முகம், உடுமலை.


விதிமீறலால் அலறல்


உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், விதிமுறைகளை மீறி, 'ஒன்வே'யில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், பாதசாரிகள் பயத்துடன் ரோட்டை கடக்கின்றனர்.ஏ.சதாசிவம், உடுமலை.


கழிவுநீர் தேங்குவதால் பாதிப்பு


ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சேகவுண்டன்புதுார், பச்சியப்ப கவுண்டர் வீதியில், சாக்கடையில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரம் பாதித்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி.மணிகண்டன், பொள்ளாச்சி.


ரோட்டில் தேங்கும் மழைநீர்


கிணத்துக்கடவு, மயிலேறிபாளையம் ரோட்டில், அரசம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே, ஏற்பட்டுள்ள பள்ளங்களில், மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், ரோடு மேலும் உருக்குலைந்து வருகிறது.எம். தேவராஜ், அரசம்பாளையம்.


மலைப்பாதையில் புதரால் சிக்கல்


வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டின் ஓரத்தில், பல இடங்களில் புதர் வளர்ந்துள்ளது. ரோட்டில் வாகனங்கள் வளைந்து செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்களை காண்பதற்குள், ஒதுங்கி செல்வதற்கும் புதர் இடையூறாக உள்ளது.எம்.ஸ்டீபன், வால்பாறை.


குப்பை குவியலால் அவதி


ஆழியாறு பூங்கா அருகே, சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற குப்பை மலைபோல் குவிந்துள்ளது. பல வாரங்களாக குப்பை அகற்றப்படாமல் உள்ளது. நிர்வாகத்தினர் குப்பையை அகற்ற வேண்டும்.எம்.ராஜா, ஆழியாறு நகர்.


பராமரிப்பின்றி கருகிய அரளி


பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் விரிவாக்கப்பணியின் போது, நல்லுாரில் அமைக்கப்பட்டுள்ள 'சென்டர் மீடியன்' பகுதியில், அரளி செடிகள் நடவு செய்யப்பட்டது. பராமரிப்பு மேற்கொள்ளாததால், அவற்றில் பல செடிகள் கருகி விட்டன.எஸ்.கே. ஹரிகரன், பொள்ளாச்சி.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X