திருக்குறள் முற்றெழுதுவோர் போட்டிதென்காசி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கடையநல்லுார் அரசு கலைக்கல்லுாரி, தென்காசி முத்தமிழ் கல்வி நிலையம், சுரண்டை பொதுநல மன்றம் இணைந்து மாணவர்களுக்கான 'ஆன்லைன்' போட்டி நடந்தது.இதில், திருக்குறள் வளர் அமைப்பு சார்பில், அனைத்து திருக்குறள்களையும் மனப்பாடமாக ஒப்பித்தும், எழுதியும் காட்டும் மாணவர்களுக்கு, 'திருக்குறள் முற்றெழுதுவோர் போட்டி' ஆன்லைன் வாயிலாக நடத்தினர். இப்போட்டியில், தமிழகம் முழுதும் இருந்து, 16,200 மாணவர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இருந்து, 70 மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியில் சிறப்பாக திருக்குறள் ஒப்பித்து, எழுதிக் காட்டிய, ஏரிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பிரியதர்ஷணி, மணிகண்டஈஸ்வரி, ஹரிணி, சுவாதி, பிரதிக் ஷா, துர்காஸ்ரீ ஆகிய, ஆறு பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர் கண்ணுசாமி, துணை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர். டி.நல்லிக்கவுண்டன்பாளையம் அரசுப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி, சுபி ஆனந்த்பிரபா, திருக்குறள்களை சிறப்பாக ஒப்பித்து, விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் பெற்றார்.'சிம்ஸ்' முதலாம் ஆண்டு துவக்கம்பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியின் (சிம்ஸ்) முதலாமாண்டு துவக்க விழாவில், கல்லுாரி ஆலோசகர் சுப்ரமணியன் வரவேற்றார். கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். 'ரூட்ஸ்' நிறுவன இயக்குனர் கவிதாசன் முன்னிலை வகித்தார்.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், ''கிராமப்புற மாணவர்களும், பெருநகரங்களுக்குஇணையான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், தொழிலதிபர் மகாலிங்கம் இக்கல்லுாரியை நவீன வசதிகளுடன் நிறுவினார். அதை, மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, உயர்ந்த நிலையை அடைய வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் பங்கேற்றார். பேராசிரியர்கள் தியாகு, சர்மிளா ஒருங்கிணைத்தனர்.ஏழை மாணவர்களுக்கு நல உதவிபொள்ளாச்சியை சேர்ந்த, முன்னாள் கல்லுாரி நண்பர்கள் இணைந்து, தன்னார்வமாக 'பொள்ளாச்சி பார்வேர்டு' என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி, பொதுநலன் சார்ந்த உதவிகளை செய்கின்றனர்.அந்த அறக்கட்டளை சார்பில், குள்ளக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் ஏழை மாணவர்களுக்கு, ஓராண்டுக்கான கல்லுாரி கட்டணம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.மேலும், அங்குள்ள இரண்டு ஏழைக் குடும்பங்களுக்கு, இரண்டு மாத மளிகை பொருட்கள் அளிக்கப்பட்டன. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, சிறப்பு கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டது. இந்நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பு, 2.5 லட்சம் ரூபாயாகும். அறக்கட்டளையின் தலைவர் சபரீஸ்வரன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவன உறுப்பினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியரான சுரேஷ் தங்கவேலுவின் பெற்றோர் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி கல்லுாரியில் விழாஹயக்கிரீவா கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும், பூசாரிபட்டியிலுள்ள பொள்ளாச்சி கலை, அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு துவக்க விழா மற்றும் என்.சி.சி., மாணவர்களுக்கு தர உயர்வு வழங்கும் விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி செயலர் அருள்மொழி தலைமை வகித்தார். தலைவர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். கோவை அரசு கலைக்கல்லுாரி உளவியல் துறைத்தலைவர் செல்வராஜ், வேதியியல் துறைத்தலைவர் பொன்னுசாமி பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்க, அதற்கான உபகரணங்கள் பரிசளிக்கப்பட்டன.பள்ளியில் ஆலோசனை கூட்டம்உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. இதில், 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்து, தன் பங்களிப்பு திட்டத்தில் பெற்றோர் மேற்கொள்ள வேண்டிய சேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, பள்ளி வளர்ச்சியில் பெற்றோர் எவ்வாறு பங்கு பெறுவது, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் மாரிமுத்து, விஜயராகவன், மயில்சாமி தமிழ்ச்செல்வி, சுமதி, வனிதா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாணவியர் உறுதிமொழி ஏற்புஉடுமலை, பாரதியார் நுாற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த 'உலக அயோடின் குறைபாடுகள் தடுப்பு' தின நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் விஜயா, தலைமை வகித்தார். மாணவியர் இடையே அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குறிப்பாக, 'அயோடின் பற்றாக்குறை பொதுமக்களை பெருமளவு பாதிக்கிறது.இளம் வயதினரின் அறிவுத்திறனை வெகுவாக குறைத்து விடுகிறது. குறைப்பிரசவம், மூளைவளர்ச்சி குறைவு, சிசு மரணம் உள்ளிட்ட நோய்களை உண்டாக்குகிறது. எனவே, அனைவரும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும், 'முறையாக உணவில் அயோடின் பயன்படுத்துவோம்; குறைகளை தவிர்ப்போம்,' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.