பந்திப்பூரில் காயமடைந்த புலிக்கு சிகிச்சை | நீலகிரி செய்திகள் | Dinamalar
பந்திப்பூரில் காயமடைந்த புலிக்கு சிகிச்சை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
06:50

கூடலுார்:பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், காயத்துடன் சிரமப்பட்டு வந்த ஆண் புலியை வனத்துறையினர் பிடித்து, மைசூரு புலிகள் மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. அங்கு புலி ஒன்று காயத்துடன் சிரமப்பட்டு வருவது தெரியவந்தது.நேற்று, வனத்துறை அதிகாரிகள் கால்நடை டாக்டர்கள் குழுவுடன் அப்பகுதிக்கு சென்று, மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்து, முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மைசூரு மிருக காட்சி சாலையில் உள்ள புலிகள் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X