306 ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு! திண்டுக்கல்லில் கழிப்பறை பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
07:16

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளிலும் பொது சுகாதாரம் மேம்பட்டுள்ளதா, கழிப்பறை பயன்பாடு உள்ளதா என ஊக்குவிப்பாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.



பொது சுகாதாரத்தை காக்கவும், திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க ‛துாய்மை இந்தியா' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் வழங்குகிறது. அதன்படி 306 ஊராட்சிகளிலும் 6 ஆயிரத்து 165 தனி நபர் கழிப்பறைகள், 81 இடங்களில் பொது சுகாதார வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.



ஆண்டுதோறும் கிராமங்களில் பொது சுகாதாரம் மேம்பட்டுள்ளதா, கழிப்பறை பயன்பாடு உள்ளதா என கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தாண்டு தற்போது கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இதில் 326 ஊக்குவிப்பாளர்கள் மூலம் தினமும் வீடு வீடாக சென்று கழிப்பறை வசதி உள்ளதா, பொது சுகாதார வளாகம் பயன்பாட்டில் உள்ளதா என கணக்கெடுக்க உள்ளனர்.



கழிப்பறை இருந்தும் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் அங்கு வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இப்பணியை கண்காணிக்க 14 வட்டாரங்களுக்கும் தலா ஒரு ஒருங்கிணைப்பாளர்கள், துாய்மை பணியை கண்காணிக்க தலா ஒரு மண்டல பி.டி.ஓ., அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.



கணக்கெடுப்பின் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், தேவையான இடங்களில் கழிப்பறை கட்டிக் கொடுத்தல், கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X