வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
07:21

ராமநாதபுரம் : முதல்போக பாசனத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்குபருவமழையை நம்பி அக்டோபருக்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். சம்பா சாகுபடியாக நெற்பயிர் விதைப்பு, களைஎடுத்தல், உரமிடும் பணி நடக்கிறது. ஆனால் பெரியகண்மாய் உட்பட பல கண்மாய்களில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.



அவ்வப்போது மழைபெய்துவருவதால் மண்ணில் ஈரப்பதம் உள்ளது.தற்போது வரை சம்பா ஒரு லட்சத்து 19 ஆயிரம்எக்டேர் பரப்பளவில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது. களை எடுத்தல், உரமிடும்பணி நடக்கிறது. முதல்போக சாகுபடி தொய்வின்றி மேற்கொள்ள வசதியாக வைகை அணையிலிருந்துதண்ணீர் திறந்தவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.



ராமநாதபுரம் வைகை பாசன விவசாய சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மதுரை வீரன் கூறியது:அக்டோபர் மழையை நம்பி சாகுபடி பணிகள்தொடங்கியுள்ளன. கண்மாய் பாசனத்தில் 54ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி நடக்கிறது. பயிர் வளர்ந்த பிறகு தண்ணீர் திறப்பதற்கு பதிலாக தற்போதே தண்ணீர் திறந்துவிட வேண்டும். மண்ணில் ஈரப்பதம் உள்ளதால் நிலையூர், விரகனுார், பார்த்திபனுார் வழியாக வரும்போது தண்ணீர் உறிஞ்சப்பட வாய்ப்பு இல்லை.



முழுமையாக கண்மாய்களில் ஆற்றுநீரை சேமிக்க முடியும். தண்ணீர் வரும் வலது, இடது கால்வாய்களை சுத்தம் செய்து, நவம்பரில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டால் முதல் போகம் அதிகரிக்கும். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம்,' என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X