'உணவே மருந்து' என்பதே தாரகமந்திரம்; ஆயுஷ் ஒருங்கிணைப்பாளர் ஹசீனா யோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
07:26

திண்டுக்கல் : சித்த மருத்துவ உதவி அலுவலர் மற்றும் ஆயுஷ் மருந்துகள் கண்காணிப்புத்துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹசீனா அன்புடன் அதிகாரி பகுதிக்காக கூறியதாவது:கோவிட் காலத்தில் 'சித்த மருத்துவம்' எவ்வாறு செயல்பட்டதுகொரோனா முதல் அலையின் போது சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கபசுரம், நிலவேம்பு போன்றவைதான் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. அலோபதியுடன் கைகோர்த்து தேவையான மருந்துள் சித்த மருத்துவம் சார்பில் வழங்கப்பட்டது.



இரண்டு அலைகளின் போதும் காந்தி கிராம பல்கலை, எம்.வி.எம்., கல்லூரிகளில் சித்தா கேர் மையம் துவங்கி செயல்படுத்தப்பட்டது.கபசுரம், நிலவேம்பு போன்றவை கொரோ னாவுக்கு மட்டும்தானாகபசுரம், நிலவேம்பு கஷாயம் போன்றவை கொரோனாவுக்காக கண்டறியப்படவில்லை. இவை ஏற்கனவே இருந்தவைதான். கொரோனா, டெங்கு முதல் பன்றிக்காய்ச்சல் வரை நோய் எதிர்ப்பு சக்திக்காக இவற்றை பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி எந்த நோய்தொற்று ஏற்பட்டாலும் தடுக்க உதவும். கொரோனாவால் உயிரிழப்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால்தான் நடந்தது என்று கூறினர். தடுப்பூசியை போன்றே இதுவும் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். எல்லாவிதமான தொற்றுக்கும் பயன்படுகிறது.



கொரோனா காலத்தில் உயிரிழப்புகொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது சித்த மருத்துவத்தை நாடியவர் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை. அதேநேரம் 5 நாட்களுக்குள் குணமடைந்து வீடு திரும்பியவர்களும் உள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன பின்பும் பலரை கண்காணித்தோம். இதுவரை எந்தவித உயிரிழப்பும் திண்டுக்கல் மாவட்டத்தில் இல்லை. தொடர்ந்து மருந்து பெட்டகம் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கும் பணிகளும் நடக்கின்றன.சித்த மருந்து எடுப் பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமாஅதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. சித்த மருந்தை பயன்படுத்துவோர் அச்சம் கொள்ளவே தேவையில்லை. அதேசமயம் கட்டாயம் அரசு வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இணைநோயால் பாதிப்பு உண்டாஅலோபதி மருந்து எடுப்பவர்களும் சித்த மருந்து பயன்படுத்தாலாம். இணை நோய்க்கான வாய்ப்புகள் இல்லை. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் என்ன நோய், எந்த மாதிரியான மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர் என்பன போன்ற பல்வேறு விஷயங்களை தெரிந்துகொண்டே பின்பே சித்த மருந்துகளை பரிந்துரை செய்கிறோம். எனவே, இணை நோய்க்கான வாய்ப்புகள் இல்லை.



ஆயுஷ் மருந்துகள் கண்காணிப்பு துறை எவ்வாறு செயல்படுகிறது



போலி மருந்துகள், போலி மருத்துவர்களை கண்டறிய மத்திய அரசு இந்த துறையை ஏற்படுத்தியுள்ளது. சித்தா, ஆயுஷ், யுனானி போன்ற மருந்துகள் தரமாக வழங்கபடுகிறதா, அதனை கையாளும் மருத்துவர்கள் சரியானவர்கள்தானா, உரிய உரிமம் வைத்துள்ளார்களா என்பதை கண்காணித்து வருகிறோம். பொதுமக்களும் கவனமுடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனியான அடையாள எண் உள்ளது. அதோடு அரசு இணையத்தில் இவர்கள் சரியான மருத்துவர்கள் தான் என்பதையும் அறிந்து கொள்ளலாம். போலியான, தரமில்லாத எதுவும் மக்களிடம் சென்றுவிடக் கூடாது என்பதில் இத்துறை கவனமாக உள்ளது.கர்ப்பிணிகளுக்கான பெட்டகம் குறித்துகர்ப்பிணிகளுக்காக அரசு மகப்பேறு பெட்டகம் என்ற பெயரில் 4 விதமாக பிரித்து மகப்பேறு காலத்தில் சித்த மருத்துவம் சார்பில் வழங்கப்படுகிறது. எவருக்கு இது தேவை என்பதை அறிந்த பின்பே வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ரத்தக் குறைபாடு உள்ளோருக்கு இவை தேவைப்படும். 3 மாத இடைவெளியில் 4 முறை வழங்கப்படுகிறது.



உடல், மன நல பயிற்சியும் அளிக்கப்படுகிறதாமே



ஆம். சித்த மருத்துவம் என்றாலும் யோகாவும் எங்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. யோகா பயிற்சியும், மன நலனை பேணிக்காப்பது குறித்த ஆலோசனைகளும் அவ்வப்போது வழங்கப்படுகிறது.பொதுமக்களுக்கு சொல்ல விரும்புவதுபொதுமக்கள் எப்போதும் "உணவே மருந்து " என்ற தாரக மந்திரத்தை மனதில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகள் நோய்களை நெருங்கவிடாது. தேவையெனில் பட்டினி கூட சில நேரங்களில் மருந்தாக மாறும். உணவுப் பழக்க வழங்கங்களை சரியாக கடைபிடித்தாலே போதும் நோயின்றி வாழலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X