சிக்கல் : இ--சேவை மைய கட்டடத்தில் சிக்கல் ஊராட்சி அலுவலகம் இயங்குகிறது.சிக்கல் ஊராட்சியில் 13 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். 12 வார்டுகள்உள்ளன. ஊராட்சி அலுவலகம் 1985ல் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டடம் சேதமடைந்தது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கிளை நுாலக கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது 2 ஆண்டுகளாக இ--சேவை மையத்தில் இயங்கி வருகிறது.ஊராட்சித் தலைவர் பரக்கத் ஆயிஷா கூறியதாவது: பழைய ஊராட்சி அலுவலகக் கட்டடத்தை இடிப்பதற்கு அரசிடம் அனுமதி கோரி உள்ளோம். பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.