தனியார் வங்கி முன்னாள் பெண் அதிகாரி தற்கொலை | ஈரோடு செய்திகள் | Dinamalar
தனியார் வங்கி முன்னாள் பெண் அதிகாரி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
10:05

புன்செய்புளியம்பட்டி: பு.புளியம்பட்டி டாணாபுதூரை சேர்ந்தவர் பொன்மணி, 47; கணவனை இழந்தவர். இவரின் மகள்கள் மஞ்சு பார்கவி, 26; வித்யபாரதி, 24; மஞ்சு பார்கவிக்கு திருமணமாகி விட்டது. சென்னையில் ஒரு தனியார் வங்கியில் துணை மேலாளராக வித்யபாரதி பணிபுரிந்தார். இந்நிலையில் பொன்மணிக்கு உடல்நிலை சரியில்லாததால், வங்கிப்பணியை விட்டுவிட்டு தாயாருடன் இருந்தார். நேற்றுமுன்தினம் பொன்மணி, மஞ்சு பார்கவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்துக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வித்யபாரதி அறையில் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். பு.புளியம்பட்டி போலீசார் பிரேதத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பு.புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X