பெத்தநாயக்கன்பாளையத்தில் 213 மி.மீ., மழை பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
10:12

சேலம்: சேலத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை, இரவு வரை விட்டு விட்டு தொடர்ந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்றும் மேக மூட்டத்துடன் வானம் காணப்பட்டது. மாலை பல இடங்களில் சாரலும், கன மழையும் பரவலாக பெய்தது.


மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு விபரம்: பெத்தநாயக்கன்பாளையம், 213 மி.மீ., சேலம், 33.2, ஏற்காடு, 13, ஆத்தூர், இடைப்பாடி தலா, 11, ஓமலூர், 6, கரியகோவில், 5, சங்ககிரி, 4.2, மேட்டூர், 2.8, காடையாம்பட்டி, 2.2, மொத்தம், 305.4 மி.மீ., இதில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். சாலை, தெருக்கள், நீரோடை, சிறு ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. கருமந்துறை - கரியகோவில் சாலை, கைக்கான்வளவில், பழமையான கொன்றை மரம் வேருடன் சாய்ந்தது. அந்த வழியே செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதனால், நேற்று காலை, மக்களே மரத்தை அகற்றி, போக்குவரத்துக்கு வழி ஏற்படுத்தினர். ஏத்தாப்பூர் ஆராய்ச்சி மைய வளாகத்தில், வயல் பகுதி, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை, ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ரேவதி ஆய்வு செய்தனர். மழை அதிகமாக பெய்ததால் சேதம் ஏற்பட்டதா, மழை அளவை எப்படி கணக்கெடுக்கிறீர் என கேட்டறிந்தனர். வாழப்பாடியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி முதல், 7:00 மணி வரை மழை பெய்தது. சில இடங்களில் நள்ளிரவு வரை சாரல் மழை தொடர்ந்ததால் கடும் குளிர் வீசியது. சேசன்சாவடி, முத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை, 7:30 மணி வரை மூடுபனி உறைந்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நிரம்பிய தடுப்பணை ஆத்தூர் அருகே, கல்வராயன்மலை பகுதியில், கல்லாறு, நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வசிஷ்ட நதிக்கு அதிகளவில் தண்ணீர் வருகிறது. இதில், ராமநாயக்கன்பாளையம் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் தண்ணீர், தென்னங்குடி பாளையம் ஏரிக்கு வந்து, மதகு வழியாக வெளியேறி, அய்யனார் கோவில் ஏரிக்கு செல்கிறது. நரசிங்கபுரம் வசிஷ்ட நதி குறுக்கே கட்டியுள்ள அணைமேடு தடுப்பணை முழுதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. விநாயகபுரம் தன்னார்வ இளைஞர் குழு, சூர்யா நற்பணி இயக்கத்தினர், மக்கள், விவசாயிகள், தண்ணீரில் பூக்களை தூவி வழிபட்டனர்.


'டெங்கு' தடுப்பு பணி: சேலம் மாநகராட்சியில் தாழ்வான இடம், காலிமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், 'டெங்கு' காய்ச்சல் அதிகரிக்கும் சூழல் உள்ளதால், தடுக்க, வாகனங்களில் கொசு மருந்து அடித்தல், வீடுகள், நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றுதல் உள்ளிட்டவற்றில், சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X