ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் வழக்கு: நண்பரிடம் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 அக்
2021
12:57
பதிவு செய்த நாள்
அக் 22,2021 12:09

ஆத்தூர் : ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக, ஆத்தூரில் வசிக்கும் அவரது நண்பரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் விசாரணை நடைபெற்று முடிந்தது. கனகராஜ் உயிரிழந்த சம்பவம் சாலை விபத்து என்று கூறப்பட்ட நிலையில் கனகராஜ் அண்ணன் தனபால் அதை மறுத்தார். கனகராஜின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தனபால் கூறியிருந்தார்.



இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில், கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் விசாரணையை நேற்று தொடங்கினார். இது தொடர்பாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்தனர் .



இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீசார் வந்தனர். பின்னர் இவர்கள் ஆத்தூர் அருகே உள்ள வடக்கு காடு சக்தி நகர் பகுதியில் வசிக்கும் கனகராஜின் நண்பர் ரமேஷ் வீட்டிற்கு இன்று காலை பத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர் . பின்னர் சுரேஷின் இல்லத்திற்குள் தனிப்படை போலீசார் சென்று விசாரணை செய்தனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-அக்-202118:21:10 IST Report Abuse
D.Ambujavalli அடுத்த 'கன்னித்தீவு' ரெடி
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
22-அக்-202116:19:53 IST Report Abuse
சீனி 50வருட அதிமுக கட்சியை, சின்னம்மாவை வைத்து சின்னாபின்னமாக்குவது தான் கட்டுமர கட்சியின் திட்டம். முதல் 100நாளில் தேர்தலை செலவை எடுத்தாச்சு, எதிர்கட்சிகளை இல்லாமல் ஆக்குவது தான் தற்போதைய ஆட்சியின் அடுத்த நூறு நாள் திட்டம்.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
22-அக்-202113:30:48 IST Report Abuse
sundarsvpr ஆண்டவனைத்தான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்று கூறுவர். இது பொய்த்து விடும் தற்போது நடத்தும் விசாரணைகளால். வேண்டாதவைக்கு எல்லாம் கருது கணிப்பு செய்யப்படுகிறது. இதற்கு நடத்தினால் விசாரணை அர்த்தமற்றது என்று கணிப்பு இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X