செக்யூரிட்டி அடித்து கொலை: தலைமறைவு வாலிபர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
12:33

ஊத்தங்கரை: கல்லாவி அருகே, தனியார் நிறுவன செக்யூரிட்டியை அடித்து கொன்று, தலைமறைவான வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி மேட்டுசூளகரையை சேர்ந்தவர் கேசவன், 50; இவர், போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள, ஓலா நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றினார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, மேட்டுசூளகரை பஸ் ஸ்டாப்பில், பணிக்கு செல்ல நின்றிருந்தபோது. அங்கு, குடிபோதையில் வந்த மேட்டுத்தாங்கலை சேர்ந்த தம்பிதுரை, 30 என்பவர், அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். அதில் படுகாயமடைந்த கேசவனை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் இறந்தார். இதையடுத்து, கொலை செய்த தம்பிதுரையை கைது செய்ய வலியுறுத்தி, கேசவனின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் சூளகரையில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தம்பிதுரையை கல்லாவி போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X