கிருஷ்ணகிரியில் 5 ஆண்டுகளில் குழந்தை திருமணம் அதிகரிப்பு: அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
12:40

கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்தாண்டுகளில், குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மக்கள் நல்வாழ்த்துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து, அனைத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம், மற்றும் விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார். இதில், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது. கடந்த, 2015ல், 246 ஆக இருந்தது, கடந்த, 10 மாதத்தில், 728 ஆக உயர்ந்துள்ளது. ஐந்தாண்டுகளில், 4,054 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. எனவே, தமிழக முதல்வர் இளவயது திருமணத்தை தடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி, வரும்போது கோவை ஐஸ்கிரீம் பார்லரில் ஐஸ்கிரீமுடன் மதுவை கலப்பதாகவும் மாணவ, மாணவியர் ஏராளமானோர் சாப்பிடுவதாகவும் தெரிந்து, அதிரடி சோதனை நடத்தி தொழிற்சாலைக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன். குழந்தை திருமணத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அதிகரித்துள்ள குழந்தை திருமணங்களை தடுக்க அமைச்சர்கள் முதல், பஞ்., தலைவர், பொதுமக்கள் வரை பாடுபட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 1098, 1091, 181 ஆகிய எண்களில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக புகார் செய்யலாம். இவ்வாறு, அவர் பேசினார். கிருஷ்ணகிரி, காங்.,-எம்.பி., செல்லகுமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ்(ஓசூர்), மதியழகன் (பர்கூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி பஞ்.,ல் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் இளவயது கர்ப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அமைச்சர்கள் வழங்கி, கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OfficeBoy - Krishnagiri,இந்தியா
23-அக்-202111:48:37 IST Report Abuse
OfficeBoy ஸ்டாலின் சார் ஊருக்குதான் உபதேசம் நமக்கில்லை. ஓகே ஓகே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X