கல்லூரி பணிக்கு நேர்காணல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
கல்லூரி பணிக்கு நேர்காணல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
16:21

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை கல்லூரியில் பணியாற்ற நேர்முக தேர்வுக்கு ஏராளமானோர் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில் அமையவுள்ள அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர், நூலகர், உடற்கல்விஆசிரியர், அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட், காவலர் பணி இடங்களுக்கு, 1,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர். நேர்முகதேர்வு அர்த்தநாரீஸ்வரர் தேவஸ்தான அலுவலகத்தில் நடந்தது. அறநிலையத்துறை சேலம் நகை சரிபார்ப்பு அலுவலர் குமரேசன், உதவி ஆணையர் மற்றும் கல்லூரி செயலாளர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் பெரியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட துறை வல்லுனர்கள் குழு நேர்காணலை நடத்தினர். 'இதில், தகுதியான, 582 பேருக்கு நேர்காணல் நடந்தது. டைப்பிஸ்ட் பணிக்கு இன்று செய்முறை தேர்வு நடக்கிறது' என, உதவி ஆணையர் சரவணன் தெரிவித்தார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X