சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
16:22

எருமப்பட்டி: கொல்லிமலை அடிவாரம் கெஜகோம்பையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரு?கே பொட்டிரெட்டிப்பட்டி பஞ்., கெஜகோம்பையில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கொல்லிமலை அடிவாரமான இந்த பகுதியில் கடந்த, 15 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் ராசம்மாள் என்பவரின், ஏழு ஆடுகளை சிறுத்தை கடித்து தூக்கிச் சென்றுள்ளது. பால்ராஜ் என்பவரது இரு ஆடுகளும் ஐந்து நாட்களுக்கு முன் காணாமல் போயின. நேற்று முன்தினம் சேகர் என்பவர் வீட்டின் அருகில் கால்நடைகள் கட்டி வைத்திருந்த போது அங்கு வந்த சிறுத்தை, ஆடுகளை கடித்துள்ளது. நான்கடி உயரத்திலிருந்த சிறுத்தையை பார்த்த சேகர் சத்தம் போட்டதை தொடர்ந்து சிறுத்தை ஓடிவிட்டது. ஆடுகளை சிறுத்øதா கடித்ததை ஒருவர் பார்த்ததாலும், சிறுத்தையின் கால் தடம், இறந்த ஆடுகளின் எலும்புகள் கெஜகோம்பையில் உள்ளதாலும் மக்கள் பீதியடைந்து வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறியதாவது: கெஜகோம்பையில் உள்ளதாக கூறப்படும் சிறுத்தை குறித்து தகவல் இல்லை. கொல்லிமலை அடிவாரப்பகுதிகளில் காட்டுப்பூனைகள் அதிகளவில் உள்ளன. அவையும், பாதி சிறுத்தை அளவிற்கு இருக்கும். இதைப் பார்த்து மக்கள் சிறுத்தை என கூறுகின்றனரா என தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X